

ஜெயங்கொண்டம்,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் சுயேச்சை வேட் பாளர்கள் என 21 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டது. 8 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன்.
வேட்பு மனுக்கள் திரும்பப்பெற இன்று (வியாழக்கிழமை) கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டி யல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் வாக்கு கேட்டு வேட்பாளர்கள் யாரும் உள்ளே வர வேண்டாம் என ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பிச்சனூர் ஊராட்சியில் உள்ள 5 மற்றும் 6-வது வார்டு பொதுமக்கள் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பிச்சனூர் ஊராட்சிக்குட்பட்ட 5 மற்றும் 6-வது வார்டுகளில் சாலை, சுகாதாரமான குடிநீர், மின்விளக்கு, கழி வுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.