கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி

கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டி
Published on

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில், வேப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நீர் ஆதாரம் உள்ள வேறு பகுதிக்கு மாற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதியை மறந்து லெப்பைக்குடிகாடு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை தண்ணீர் இல்லாத வறண்ட பூமியாக மாற்ற முயற்சிக்கப்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினை வராமல் இருக்க ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். இப்படிக்கு லெப்பைக்குடிகாடு நீர் ஆதார பாதுகாப்பு குழு என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com