முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு


முதுகலை ஆசிரியர் தேர்வு; ஹால்டிக்கெட் வெளியீடு
x

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 மற்றும் கணினி பயிற்றுவிப்பாளர் கிரேடு-1 பதவிகளுக்கான தேர்வு வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழகத்​தில் உள்ள அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் 1,996 முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) காலிப்​பணி​யிடங்​களை நிரப்​புவதற்​கான அறிவிக்​கையை ஆசிரியர் வாரி​யம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளி​யிட்டு அதற்​கான ஆன்​லைன் விண்​ணப்​பங்​களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரைபெற்​றுக்​கொண்​டது. எழுத்துத்தேர்வு அக்​. 12-ம் தேதி நடை​பெறும் என அறி​வித்​தது.

இந்​நிலை​யில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண் 02/2025 நாள் 10.07.2025 ன் படி 2025-ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர் உடற்கல்லி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு வரும் 12-102025 அன்று நடத்தப்பட உள்ளது. இத்தேர்வினை எழுத 2,36,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச்சீட்டு ஹால் டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் 30-09-2025 முதல் அவர்களது பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு தேர்வுக்குட நுழைவுச்சீட்டு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேர்வர்கள் தேர்விற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே தங்களுக்குரிய நுழைவுச்சீட்டனை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story