பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசு அனைத்து துறை ஊழியர், ஆசிரியர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
Published on

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசு அனைத்து துறை ஊழியர், ஆசிரியர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க கூட்டம்

அரசு அனைத்து துறை ஊழியர், ஆசிரியர் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினா செல்வம் வரவேற்று பேசினார் மாவட்ட செயலாளர் திருமுருகன் திட்ட அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரியக்குழு உறுப்பினர் புஷ்பராஜ், துணைத்தலைவர் கண்ணன், துணைச்செயலாளர் பூமி ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஜாகீர் உசேன், மலைராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளராக பலராமன், கவுரவ ஆலோசகராக மாலதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக செல்வம் மற்றும் ரஞ்சனி ஆகியார் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நடந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் நிலையினை மனதில்கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் காக்க மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமாவது பழைய ஓய்வூதிய திட்டம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பின் பொருட்டு வழங்கப்பட்ட 15 நிமிட கால பணி முடிந்து முன் செல்லும் அனுமதியை 30 நிமிடமாக உயர்த்தி வழங்க வேண்டும். பொது போக்குவரத்தில் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் நடத்த ஆணை பிறப்பித்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பெற்றோருடைய குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அரசுப்பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் மாவட்ட மாறுதல் வழங்கும்போது அவர்களது பணிமூப்பு முறியாமல் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும். 70 சதவீதம் மேலுள்ள மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் பொது போக்குவரத்தில் உதவியாளர் உடன் வர அனுமதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்டப் பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com