தபால்களை வீட்டில் பதுக்கிய தபால்காரர் பணியிடை நீக்கம்

அரசு ஆவணங்கள் உட்பட பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய கடிதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தபால்களை வீட்டில் பதுக்கிய தபால்காரர் பணியிடை நீக்கம்
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த போஸ்ட்மேன் செந்தில்குமார் என்பவர், பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டிய கடிதங்கள் மற்றும் தபால்களை டெலிவரி செய்யாமல் நீண்ட நாட்களாகத் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தபால் துறை

இதையடுத்து இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தபால் துறை அதிகாரிகள் திருப்பூர் மாவட்ட தபால் துறையின் உயர் அதிகாரிகள் , போஸ்ட்மேன் செந்தில்குமார் வீட்டில் மூட்டை மூட்டையாகக் குவிந்து கிடந்த 7 மூட்டை தபால்களை அதிரடியாக மீட்டனர். மீட்கப்பட்ட தபால்கள் அனைத்தும் ஆட்டோ மூலம் தபால் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பொதுமக்களின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய தபால்களை விநியோகிக்காமல் பதுக்கிய போஸ்ட்மேனின் இந்த செயலால் அப்பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சம்பந்தப்பட்ட தபால்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

பணியிடை நீக்கம்

இந்தநிலையில், தனது வீட்டில் 7 மூட்டை கடிதங்களை பதுக்கி வைத்து இருந்த தபால்காரர் தபால்காரர் செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் அவர் மீது துறைரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும், வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக தபால்கள் விரைவில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தபால்துறை அதிகாரிகள் தெரிவிவித்துள்ளனர்.

நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு

ஏடிஎம் கார்டுகள், பாஸ்போர்ட், அரசு வேலைவாய்ப்பு ஆணைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் இந்தத் தபால்களும் விநியோகிக்கப்படாமல் உள்ளதால், அரசு ஊழியராக இருந்து, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொதுமக்களின் சொத்தை (தபால்களை) துரோகம் செய்து பதுக்கியதற்காக நம்பிக்கை மோசடி வழக்கு பதிவு செய்ய முடியும், அதேபோல் பொதுமக்களின் கடிதங்களைச் சட்டவிரோதமாகத் தனது தனிப்பட்ட இடத்தில் மறைத்து வைத்ததற்காக அரசு ஆவணங்களைச் சேதப்படுத்துதல்/திருடுதல் பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியும் என கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com