

திருப்பத்தூர் தாலுகா தாமலேரிமுத்தூர் கிராமத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) எருது விடும் திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காகவும், பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் தேர்வு தடைபடுவதை கருத்தில் கொண்டும் மறுதேதி அறிவிப்பின்றி எருது விடும் திருவிழா ஒத்திவைக்கப்படுகிறது என்று திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி தெரிவித்துள்ளார்.