

சென்னை,
சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வழக்கமாக நவம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வின் செய்முறைத் தேர்வு கடந்த 3-ந் தேதியும், எழுத்துத் தேர்வு வருகிற 21-ந் தேதியும் தொடங்கி நடைபெறுவதாக இருந்தன. அந்த தேர்வுகள் அரசின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசிடம் இருந்து மேலும் வழிகாட்டுதல்கள் கிடைத்தவுடன், திருத்தப்பட்ட தேர்வு தேதிகள் கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படும். இந்த தகவலை கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.