பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்புக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு
Published on

சென்னை,

இது குறித்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு. இம்முடிவை நான் வரவேற்கிறேன். பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.

கொரோனா வைரஸ் நோய் மிகவும் ஆபத்தானது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இனிவரும் நாட்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்த முடிவு மருத்துவ வல்லுனர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஓணம் திருநாளின்போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததுதான் கேரளத்தில் கொரோனா அதிகரிக்க காரணம். தமிழகத்தில் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க தீபஒளி காலத்தில் கூடுதல் கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் மக்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com