ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..!
Published on

சென்னை,

2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நாளை நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் உத்தவிடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு (தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி) நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"2022-23-ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக வழிகாட்டு நெறிமுறைகள் காலஅட்டவணைகள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது நிருவாக காரணங்களுக்காக மேற்காண் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் (தொடக்கக் கல்வி& பள்ளிக் கல்வி) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com