

சென்னை,
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் ரூபாய் 21.80 கோடி மதிப்பீட்டில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல் - அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், மண்டலம் 1 முதல் 15 வரையிலான சாலைகளில் உள்ள பள்ளங்களை கான்கிரீட் கலவை மற்றும் தார் கலவைகளைக் கொண்டு சீர்செய்யும் பணிக்காக பேருந்து சாலைகளில் ரூ.9.25 கோடி மற்றும் உட்புறச் சாலைகளில் ரூ.12.55 கோடி என மொத்தம் ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் பள்ளங்களை சீர்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, அம்பத்தூர் மண்டலத்தில் வார்டு-79ல் பச்சையம்மன் தெரு, இந்திரா காந்தி தெரு, லெனின் நகர் 10ஆவது பிரதான சாலை, வார்டு-80ல் நியூ அண்ணாநகர் 2ஆவது குறுக்குத் தெரு, புதூர் பிரதான சாலை, அபிராமிபுரம் பிரதான சாலை, கிழக்கு பானு நகர், பானு நகர் 24ஆவது அவென்யூ, பாரதி தெரு, வார்டு-81ல் நைனியம்மாள் தெரு, வெங்கடராமன் ஐயர் தெரு, சரஸ்வதி பாண்டுரங்கன் தெரு, நாதள்ள சம்பத் செட்டி தெரு, வார்டு-82ல் பாரி நகர் 2ஆவது தெரு, பாலகிருஷ்ணன் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, ஆழவந்தார் தெரு, வார்டு-83ல் ராஜீவ் நகர், அண்ணாநகர் 6ஆவது தெரு, ஏ.வி.எஸ். நகர், டி.வி.எஸ். நகர் பிரதான சாலை, 1ஆவது பிரதான சாலை, பத்மாவதி நகர், வார்டு-84ல் இரயில்வே ஸ்டேஷன் சாலை, 40ஆவது தெரு, புதூர் ஹைரோடு, சிவசக்தி நகர் 1ஆவது தெரு, வார்டு-85ல் எம்.டி.எச்.சாலை, வார்டு-87ல் ராஜா தெரு, 9ஆவது குறுக்குத் தெரு, வார்டு-88ல் 2ஆவது அவென்யூ, வார்டு-89ல் டி.எஸ்.கிருஷ்ணா நகர் முதல் தெரு, வார்டு-91ல் ஏரி திட்டம் முதல் பிரதான சாலை, பள்ளி சாலை, 7ஆவது பிளாக் ஆகிய சாலைகளில் இருந்த பள்ளங்கள் சிமெண்ட் கான்கிரீட் கலவை கொண்டு மூடி சீர்செய்யப்பட்டது. மேலும், இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.