பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கம்

பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் நாளை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விழுப்புரம்,

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரெயில் நாளை இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்னக ரெயில்வேயின் திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (வியாழக்கிழமை) காலை 9.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை பகல் 12.40 மணிக்கு புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையம் வந்தடையும். இந்த 2 ரெயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com