பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்

பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்தின் போது பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி,

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்:06130) நாளை (மார்ச் 3) அன்று காலை 10.10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திருவண்ணாமலையில் இருந்தி விழுப்புரம் செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06129) நாளை (மார்ச் 3) அன்று பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com