கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்

ஏற்கனவே கடந்த 4-ந் தேதி, முதலாவது அணு உலையில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்
Published on

கூடங்குளம்,

டர்பனில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டின் நிதி உதவியுடன் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை முதலாவது அணு உலையின் டர்பன் பகுதியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் உடனடியாக பழுதை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின் உற்பத்தி நிறுத்தம்

ஏற்கனவே கடந்த 4-ந் தேதி, முதலாவது அணு உலையில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்ட பிறகு கடந்த 6-ந் தேதி தான் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று டர்பனில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அடுத்தடுத்து பழுது ஏற்பட்டு வரும் நிலையில், 2-வது அணு உலையில் வழக்கம்போல் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com