வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தநிலையில், வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2-வது யூனிட்டின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






