வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் வியாழக்கிழமை 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட்டும் 2-வது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் முதல் யூனிட்டில் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com