வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடக்கம்
Published on

திருவள்ளூர்,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.

இங்கு 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுவந்தனர்.

தற்போது அதன் பழுது சீரமைக்கப்பட்டு அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com