சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த தறித்தொழிலாளி கைது

வீட்டில் யாரும் இல்லாத போது கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.
கைது
Published on

சங்ககிரி,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே எர்ணாபுரம் கிராமம் மேட்டுதெரு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது39). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மாதையனுக்கு கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் 34 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மாதையன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்து உள்ளார். ஆரம்பத்தில் அந்த பெண்ணை நல்ல முறையில் கவனித்து வந்ததாகவும், பின்னர் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி மாதையன் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளான 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி கடந்த 3 வாரங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இது குறித்து தாய் விசாரித்த போது தன்னிடம் மாதையன் கடந்த 4 மாதங்களாக தவறாக பேசி வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத போது கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். மேலும் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும், வெளியே கூறினால் உனது தாயை அடித்துக்கொலை செய்து விடுவதாகவும் மாதையன் மிரட்டியதாக சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.

கைது

இதையடுத்து சிறுமியின் தாய், சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கலையரசி ஆகியோர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதையனை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com