நாளை மின்சாரம் நிறுத்தம்

நல்லூர், பருத்திப்பள்ளி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

நல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம் நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமனம்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், அவிநாசிப்பட்டி, பிள்ளாநத்தம், சீத்தகாடு, மோர்பாளையம், வட்டூர், ஆனங்கூராம்பாளையம், செம்மங்குட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம், பி.கே.பாளையம், அத்திமரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் வரதராஜன், முருகன் ஆகியோர் தெரிவித்துள்னர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com