சென்னையில் 11-ந்தேதி மின்தடை - மின்சார வாரியம் தகவல்

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 11-ந்தேதி மின்தடை - மின்சார வாரியம் தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சென்னையில் 11.02.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

நங்கநல்லூர்: ஷீலா நகர், ஐஸ்வர்யா தெரு, எரிகரை தெரு, ராமகிருஷ்ண ராஜு நகர், நீலமேகம் தெரு, அகத்தியர் தெரு, மணிகண்டன் தெரு, அன்னை தெரசா நகர், ஏழுமலை தெரு, ஏ.ஜி.எஸ். காலனி, பாலாஜி நகர் தெரு, சிவபிரகாசம் நகர், சங்கரா நகர், சங்கரதாஸ் தெரு, நந்தனார் தெரு, முல்லை தெரு, சிவசுப்ரமணியன் தெரு, அம்பிகாபதி தெரு, ராமலிங்க நகர், குப்புசாமி தெரு, கங்கை தெரு, யமுனை தெரு, வைகை தெரு, சொக்கநாதன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சிவராமன் தெரு, சதாசிவம் நகர், ராம் குமார் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

ராயபுரம்: எம்.சி. சாலை, சிமென்டிரி சாலை, பி.வி கோவில், ராமன் சாலை, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு, மனிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதாம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா சர்ச் தெரு, சிங்கார தோட்டம் தெரு, மீனாட்சி அம்மன் பேட்டை, டோபி கானா தெரு, வைகுண்ட நாடார் தெரு, சோமுசெட்டி தெரு, வெங்கடேசன் 1 முதல் 4 வது தெரு வரை, அம்மன் கோவில் 1 முதல் 8 வது தெரு வரை, ராஜகோபால் தெரு, பஜனை கோவில் தெரு, செல்வ விநாயகர் கோவில் தெரு, சோலையப்பன் பகுதி, நல்லப்ப வாத்தியார் தெரு, வள்ளுவன் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com