சோழவந்தான், வண்டியூர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

சோழவந்தான், வண்டியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது
சோழவந்தான், வண்டியூர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
Published on

வாடிப்பட்டி

சமயநல்லூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சோழவந்தான் துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்ட் கிளிட்டரா ஸ்கூல், மேலகால், தாராப்பட்டி, கச்சராயிருப்பு, கீழமட்டையான், மேல மடையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து, மேலகால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி, மண்ணாடிமங்கலம், அயப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

அதேபோல் வண்டியூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வண்டியூர் மாந்தோப்பு, தீர்த்தக்காடு, அனுமார்பட்டி, சவுராஷ்டிரபுரம், லெட்சுமிபுரம், சதாசிவம் நகர், மக்கள் மன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுதுதப்படுகிறது என மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com