உத்தமபாளையம், லட்சுமிபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

உத்தமபாளையம், லட்சுமிபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது
உத்தமபாளையம், லட்சுமிபுரம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால் உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, அணைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்தார்.

இதேபோல் பெரியகுளம் அருகே உள்ள மதுராபுரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சுமிபுரம், கைலாசப்பட்டி, தாமரைக்குளம், டி.கள்ளிப்பட்டி, அனுகிரகா நகர், ரத்தினாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com