கடலூரில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை

கடலூரில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
கடலூரில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை
Published on

கடலூர்,

கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் செம்மண்டலம், நல்லாத்தூர், வெள்ளக்கரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதனால் அன்று செம்மண்டலம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட காந்திநகர், மஞ்சக்குப்பம், காமராஜ்நகர், வில்வநகர், அழகப்பாநகர், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, பெரியசாமிநகர், தாழங்குடா, சண்முகபிள்ளை தெரு, பழைய கலெக்டர் அலுவலக பகுதிகள், அங்காளம்மன் கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமிநகர், போலீஸ் குடியிருப்பு,

புதுக்குப்பம், அண்ணாநகர், துரைசாமிநகர், தேவனாம்பட்டினம், சுனாமிநகர், மரியசூசைநகர், பாரதிரோடு, சொரக்கல்பட்டு, பீச்ரோடு, நேதாஜிரோடு, சீதாராம்நகர், கே.கே.நகர், பத்மாவதிநகர், புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம், ராஜீவ்காந்திநகர், இந்திராகாந்திநகர், குறிஞ்சிநகர், செம்மண்டலம் சர்ச்ரோடு, வரதராஜன்பிள்ளைநகர், நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, நடேசன்நகர், பெரியகங்கணாங்குப்பம், சின்ன கங்கணாங்குப்பம், உச்சிமேடு, ஞானமேடு, சுபஉப்பலவாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும்.

மேலும் நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ்குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், ராசபாளையம், புதுபூஞ்சோலைகுப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், சிங்கிரிகுடி ஆகிய பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும்.

இது தவிர வெள்ளக்கரை, மாவடிப்பாளையம், டி.புதுப்பாளையம், குறவன்பாளையம், சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம், கிழக்கு ராமாபுரம், வண்டிக்குப்பம், மேற்கு ராமாபுரம், ஒதியடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். மின்தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com