விழுப்புரம் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

விழுப்புரம் பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
விழுப்புரம் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மின் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள்(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான, விழுப்புரம்நகரம், சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டி மேடு, வடக்கு தெரு, விராட்டி குப்பம், கே.வி.ஆர். நகர், நன்னாடு, பாப்பாங்குளம் திருவாமத்தூர், ஓம் சக்தி நகர், மரகதபுரம் கப்பூர், பிடாகம், பிள்ளையார்குப்பம், பொய்யப்பாக்கம்,

நாராயணன் நகர், ஆனாங்கூர், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகர், கம்பன் நகர், தேவநாத சுவாமி நகர், மாதிரிமங்கலம் பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம், வி. அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை நகரம், தொடர்ந்தனூர், கோலியனூர், கோலியனூர் கூட்டுரோடு ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மின் தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com