நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின்தடை ஒத்திவைப்பு

மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி, புதிய பஸ் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
திருநெல்வேலி
திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் இன்று (12.06.2025, வியாழக்கிழமை) மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களுக்காக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






