இன்று மின்சாரம் நிறுத்தம்

தாடிக்கொம்பு, இடையக்கோட்டை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

தாடிக்கொம்பு துணை மின்நிலையத்துக்குட்பட்ட இன்னாசிபுரம் மின்பாதையில் இன்று (புதன்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் பகுதி, அம்மன் நகர், அழகுசமுத்திரப்பட்டி, ஆனந்தபுரம், அகரம் முத்தாலம்மன் கோவில் பகுதி, அகரம் பிரிவு, அருணாசலநகர், ராஜகோபாலபுரம் ஆகிய ஊர்களுக்கும், அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்கும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை, திண்டுக்கல் வடக்கு உதவி செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இடையக்கோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஓடைப்பட்டி மின்பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ஓடைப்பட்டி, ராகவநாயக்கன்பட்டி, குத்திலுப்பை, கே.டி.புதூர், கொங்கபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று ஒட்டன்சத்திரம் ஊரக உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com