இன்று மின்நிறுத்தம்

திருக்குவளை, கீழ்வேளூர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்று மின்நிறுத்தம்
Published on

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை தெற்கு உட்கோட்ட பிரிவு உதவி செயற்பொறியாளர் ராய்ஸ்ட்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருக்குவளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான குண்டையூர், சாட்டியக்குடி, மோகனூர், இறையான் குடி, இளிஞ்சூர், வண்டலூர், செண்பகபுரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.மேலும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் பகுதிகளான கீழ்வேளூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும், பாலாஜி நகர், மயிலாகுடி, கீழ்வேளூர், ஒதியத்தூர், ஓர்குடி, கடம்பங்குடி, அகரகடம்பனூர், ஆழியூர், கோகூர், வடகரை, மணல்மேடு, புலியூர், தேவூர், இலுப்பூர், ராதாமங்கலம், பட்டமங்கலம் ஆகிய பகுதிகளுக்கும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com