இன்று மின் நிறுத்தம்

திருக்குவளை, கீழ்வேளூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்று மின் நிறுத்தம்
Published on

வேளாங்கண்ணி:

நாகை மின் கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருக்குவளை மற்றும் கீழ்வேளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனால் இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளானதிருக்குவளை, சமத்துவபுரம், குண்டையூர், வலிவலம், சாட்டியகுடி, வண்டலூர், கார்குடி, நால்ரோடு, மணலி, வாழக்கரை, மீனம்பநல்லூர், செம்பியன்மாதேவி, சோழவித்யாபுரம், எட்டுக்குடி, ஈசனூர் மற்றும் பழையாற்றங்கரை, கீவளூர், தேவூர், புலியூர், ஆழியூர், குருக்கத்தி, கோகூர், கூத்தூர், ராதாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நரிமணம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெரும் பூதங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், வெங்கிடங்கால், கொட்டாரக்குடி, சோழங்கநல்லூர், வைப்பூர், நெய்குப்பை, மேலபூதலூர், கீழபூதனூர், சூரனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் (வடக்கு) உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com