இன்றும், நாளையும் மின் நிறுத்தம்

அரக்கோணம் பகுதிகளில் இன்றும், நாளையும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்றும், நாளையும் மின் நிறுத்தம்
Published on

அரக்கோணம் மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களின் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி மற்றும் வின்டர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எச். டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ் குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம், அம்மனூர், நேவல், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகைபோளூர், வாணியம் பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும், தண்டலம், மின்னல், நரசிங்கபுரம், அன்வர்திகான்பேட்டை, குண்ணத்தூர், கூடலூர், பாராஞ்சி, வேடல், அல்ட்ரா டெக் சிமெண்ட், குருவராஜப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை அரக்கோணம் செயற் பொறியாளர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com