முசிறியில் இன்று மின் நிறுத்தம்

முசிறியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
முசிறியில் இன்று மின் நிறுத்தம்
Published on

முசிறி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை முசிறி, சிங்கார சோலை, பார்வதிபுரம், கைகாட்டி, ஹவுஸிங் யூனிட், சந்த பாளையம், திருச்சி ரோடு துறையூர் ரோடு, அழகாபட்டி, சிலோன் காலனி, தண்டலை புத்தூர், வேளகாநத்தம், காமாட்சி பட்டி, வடுகப்பட்டி, தொப்பளாம்பட்டி, அந்தரப்பட்டி, மணமேடு, அலகரை, கருப்பனாம்பட்டி, கோடியம்பாளையம், சீனிவாசநல்லூர் சிந்தம் பட்டி, சிட்டிலாரை, மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, தும்பலம் திருஈங்கோய் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் அனந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com