நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதேபோல் நாளை கெட்டிமேடு துணை மின்நிலையத்திலும் நாளை மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோணங்கிப்பட்டி, பொன்னேரி, காளிசெட்டிப்பட்டி, புதுக்கோட்டை, அ.பாலப்பட்டி, ஈச்சவாரி, பொம்மசமுத்திரம், கணவாய்ப்பட்டி, கெட்டிமேடு, பொட்டிரெட்டிப்பட்டி, பீமநாயக்கனூர், பெருமாப்பட்டி, தூசூர், கொடிக்கால்புதூர், ரெட்டிப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com