நாளை மின்சாரம் நிறுத்தம்

சத்திரப்பட்டி, கள்ளிமந்தையம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

பழனி அருகே உள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரலப்பட்டி, தாசரிப்பட்டி, ராமபட்டினம்புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி கள்ளிமந்தையம், மண்டவாடி, சின்னையகவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்பட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, தேவத்தூர், கே.டி.பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை கள்ளிமந்தையம் உதவி செயற்பொறியாளர் சந்தனமுத்தையா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com