திருத்தணியில் நாளை மின்தடை

திருத்தணியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருத்தணியில் நாளை மின்தடை
Published on

திருத்தணி முருகன் கோவிலில் அடுத்த மாதம் ஆடிக்கிருத்திகை திருவிழா நடைப்பெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு திருத்தணி நகரம்-1 பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் என திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் மு.சி.பாரிராஜ் தெரிவித்துள்ளார்.

நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நல்லான்குளம், மேல் திருத்தணி, முருகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சேகர்வர்மா நகர், காமராஜர் நகர், வாரியார்நகர், பெரியார் நகர், அண்ணாமலை நகர், வெற்றிவேல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com