நாளை, நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

நாளை, நாளைமறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on

நாமக்கல் துணைமின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிபட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிபட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஒ. காலனி, வீசாணம் மற்றும் சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் கபிலர்மலை துணை மின் நிலையத்தில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம் பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் சுந்தரராஜன், வரதராஜன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com