இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on

திருச்செங்கோடு

திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட இளநகர் துணை மின் நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தண்டிப்பட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, செருக்கலை, பெரிய மணலி, கோக்கலை, மாணிக்கம் பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மல்லசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைப்பட்டி, செம்பாம்பாளையம், கூத்தாநத்தம், காளிப்பட்டி, மங்களம், கரட்டு வளவு, சின்னகாளிப்பட்டி, செண்பக மகாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி, கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com