இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஆயக்குடி, செம்பட்டி பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
Published on: 

பழனி மின்கோட்டத்துக்கு உட்பட்ட ஆயக்குடி, அமரபூண்டி, அப்பனூத்து, குமாரபாளையம் ஆகிய பீடர்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஆயக்குடி, அய்யம்புள்ளி, வரதமாநதி, புளியமரத்துசெட், ராமநாதன்நகர், பாலசமுத்திரம், பாலாறு, பொருந்தல், வெட்டுக்கோம்பை, கணக்கன்பட்டி, பொட்டம்பட்டி, ரூக்குவார்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, அமரபூண்டி, அப்பனூத்து, திருவாண்டபுரம், புங்கமுத்தூர், மேட்டுப்பட்டி, அப்பிபாளையம், கஞ்சிகாளிவலசு, மிடாப்பாடி, பிரகாசபுரம், வன்னியர்வலசு, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.

இதேபோல் செம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதையொட்டி இன்று வக்கம்பட்டி, ஆரியநல்லூர் கூட்டுக்குடிநீர் பகுதிகள், குட்டியபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று சின்னாளப்பட்டி மின்வாரியத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com