மின் விநியோகம் விரைவில் சீராகும் - அமைச்சர் தங்கமணி தகவல்

மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் விரைவில் சீராகும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் விரைவில் சீராகும் - அமைச்சர் தங்கமணி தகவல்
Published on

சென்னை,

நிவர் புயலின் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையிலும் இரவு பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 390 இடங்களில் மின் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புயல் முழுவதுமாக கரையை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் மழைநீர் வடிய துவங்கி உள்ளது.

இந்நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் விரைவில் சீராகும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டதால் பாதிப்பு குறைந்துள்ளதாகவும், புயல் பாதித்த மாவட்டங்களில் விரைவில் மின் விநியோகம் சீராக்கப்படும் என்றும், பிற மாவட்டங்களில் இருந்து மின் பணியாளர்கள் வரும் அளவிற்கு சேதம் ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com