அதிகாரம் எளியவருக்கு.. அதிலென்ன ஆத்திரம் - விசிக

ஆ.ராசாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விசிகவின் பொருளாளர் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிகாரம் எளியவருக்கு.. அதிலென்ன ஆத்திரம் - விசிக
Published on

தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்களில் மட்டுமே அக்கட்சி வென்ற நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு அளித்தன. இதில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் முதல் கட்சியாக இடம் பெற்ற நிலையில், விஜய் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன.

இதன்படி, தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் ஷாஜஹானும் இணைந்தனர். அவர்கள் இருவருக்கும் முறையே சமூக நீதித்துறை மற்றும் சிறுபான்மையின நலத்துறை பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. தவெகவிற்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாகவும் திமுக கூட்டணியில்தான் நீடிப்பதாகவும் கூறி வந்த விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இணைந்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையடுத்து, திமுக தரப்பில் இருந்து விசிக மீதான விமர்சனம் எழத்தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக எம்.பி ஆ,ராசா மிக காட்டமான விமர்சனத்தை விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீது வைத்து இருந்தார். எனினும், சிறிது நேரத்தில் இந்த பதிவை ஆ.ராசா நீக்கிவிட்டார்.

இந்த நிலையில், ஆ.ராசாவின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விசிகவின் பொருளாளர் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அதிகாரம் எளியவர்க்குஅதிலென்ன ஆத்திரம் ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது

அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே.அநீதி தொடர்ந்து அனைத்தும் உரைத்தால்அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்” என்று பதிவிட்டுள்ளார்

X

Daily Thanthi
www.dailythanthi.com