விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
Published on

தூத்துக்குடி:

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதே போன்று தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதியில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அதன்படி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் இன்று (புதன்கிழமை) மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com