நான் முதல்வன் திட்டத்தின் கீழ்போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ்போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசி நாள்
Published on

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தர்மபுரியில் நடைபெற உள்ள போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு விண்ணப்பிக்க வருகிற 20- ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இலவச பயிற்சி வகுப்புகள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியாளர் தேர்வாணையம், வங்கி பணிகள், ரெயில்வே பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. சிறந்த பயிற்றுனர்களை கொண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 25-ந் தேதி முதல் கடகத்தூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்குகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் 3 மாத காலம் நடைபெறும். பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர தங்களுடைய சரியான முழுமையான விவரங்களை https://bit.ly/44MQbel என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம். அல்லது அரசு இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

முன்னுரிமை

இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்க வருகிற 20- ந்தேதி கடைசி நாள் ஆகும். இந்த இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்களை பெற தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தர்மபுரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரி முதல்வர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போட்டி தேர்வர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் காலதாமதம் இன்றி விரைவில் பதிவு செய்து கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com