பழமையான தமிழ் கல்வெட்டுகளை படிக்க பயிற்சி

பழமையான தமிழ் கல்வெட்டுகளை படிக்க பயிற்சி
பழமையான தமிழ் கல்வெட்டுகளை படிக்க பயிற்சி
Published on

திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு தமிழி, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் படிக்க பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்கள் 23 பேருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக கல்வெட்டுகள் காணப்படும் கோவிலான திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை நேரில் படித்து அறியும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த கோவிலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் உள்ளிட்ட பிற்கால பாண்டியர்கள், விஜய நகர மன்னர் வீரகம்பண உடையார், நாயக்கர், மாவலி வாணாதிராயர், சேதுபதி மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளை மாணவர்கள் படித்து எழுதிப் பார்த்தனர். இங்குள்ள ஒரு பாண்டியர் கல்வெட்டில் இப்பகுதியில் உள்ள பல ஊர்களின் பெயர்கள் காணப்படுவது மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பயிற்சியை மன்றச் செயலர் ராஜகுரு மாணவர்களுக்கு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com