ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா

ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா வருகிற 11-ந்தேதி நடக்கிறது.
ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா
Published on

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற11-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா (மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகின்றது.

இந்த முகாமில் தகுதியுடைய ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், 8-ம் வகுப்பு வரை படித்த /இடைநின்ற, 10-ம் வகுப்பு வரை படித்த/ இடைநின்ற மற்றும் 12-ம் வகுப்பு வரை படித்த/ இடைநின்ற மாணவர்களுக்கும் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு காஞ்சீபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 044-29894560.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com