கோபி, ஊஞ்சலூர் பகுதி ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கோபி, ஊஞ்சலூர் பகுதி ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
கோபி, ஊஞ்சலூர் பகுதி ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
Published on

கோபி மாதேசியப்பன் வீதியில் பிரசித்தி பெற்ற மாதேஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷத்தையொட்டி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், எலுமிச்சை பழம், தேன், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாதேஸ்வரருக்கு வெள்ளி கவசம் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி உற்சவ மூர்த்தியான நாகேஸ்வரர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நந்தி வாகனத்தில் நாகேஸ்வரர், அம்மன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மேலும் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் இரட்டை நந்திக்கும், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள நந்திக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. மேலும் பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலில் பிரதோஷம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com