கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
Published on

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதையொட்டி பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், திரவியபொடி, மாவுப்பொடி உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. மலர்களால் அலகரிக்கப்பட்டு, சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சின்னவளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி ஆகிய ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிகேஸ்வரர், ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள பஞ்சவர்னேஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com