சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
Published on

சமயபுரம்:

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உபகோவிலாக விளங்கும் போஜீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையாட்டி கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து போஜீஸ்வரருக்கும், ஆனந்தவல்லி தாயாருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசுவாமி கோவில், காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com