தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம்

சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங்கின் தொடர்பு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கான சிறப்பு பார்வையாளராக பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தொடர்பு விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, தொடர்பான பணிகளுக்காக, பிரதாப் சிங்கை சிறப்பு பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவரின் தொடர்பு விவரங்கள் பின்வருமாறு;-

பெயர் - பிரதாப் சிங்

பதவி - சிறப்பு பார்வையாளர், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026

அலுவலக முகவரி - அறை எண் 412, இணைப்பு கட்டிடம், ஆயகர் பவன்,சென்னை

தொடர்பு எண்கள் - அலுவலகம்: 044 28338378 கைபேசி: 7845321461

மின்னஞ்சல் - splobs.pelecd@tn.gov.in

தொடர்பு அலுவலர் - ஜெகன் மோகன், கைபேசி: 9551322999

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விவரங்கள் வாயிலாகச் சிறப்புப் பார்வையாளரை தொடர்புகொள்ளலாம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com