வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
Published on

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் கைலாச கோலத்தில், மேற்கு முகமாக அமர்ந்து ருத்ரகோடீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் ருத்ரகோடீஸ்வரர் மற்றும் நந்தியெம்பெருமானுக்கு 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com