மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன் : திருப்பதியில் முதல் அமைச்சர் பேட்டி

உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன் சாமி தரிசனம் செய்த பின் முதல் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன் : திருப்பதியில் முதல் அமைச்சர் பேட்டி
Published on

திருப்பதி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து குடும்பத்துடன் கார் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார். அங்கு இரவு தங்கிய முதல் அமைச்சர், இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பூஜையில் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் பழனிசாமி, உலக நன்மை, மக்கள் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன் என்றார். அதன்பிறகு, அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com