செல்போன் எண்ணை முடக்கிய கணவர்.. கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு

சில நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே தகராறு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
செல்போன் எண்ணை முடக்கிய கணவர்.. கர்ப்பிணி மனைவி எடுத்த விபரீத முடிவு
Published on

சென்னை,

கணவன் -மனைவி

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா வயது(23). இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள நாகிரெட்டி தோட்டத்தைச் சேர்ந்த குமாரேஷ் (வயது 26) என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். குமாரேஷ் வடபழனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே தகராறு காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, ரஞ்சிதா வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.

தற்கொலை

இருப்பினும் , அவர் தனது கணவருடன் செல்போன் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். ரஞ்சிதா கடந்த வியாழக்கிழமை அன்று தனது கணவர் குமாரேசுக்கு செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டார். அழைப்புகள் தொடர்ந்து வந்தபோதிலும் குமாரேஷ் அவரிடம் பேசவில்லை. மேலும் அவரது செல்போன் எண்ணை முடக்கவும் செய்தார். இதனால் மன உளைச்சல் அடைந்த ரஞ்சிதா அன்று இரவு தற்கொலை செய்து கொண்டார்.

கர்ப்பிணி

தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரஞ்சிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் ரஞ்சிதா கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. கணவருடனான தகராறு மற்றும் செல்போன் எண் முடக்கப்பட்டது தொடர்பான நிகழ்வுகளே இந்த சம்பவத்திற்கு காரணமா..? என்பது குறித்து பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com