ரெயிலில் அடிபட்டு கர்ப்பிணி சாவு

உளுந்தூர்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார்.
ரெயிலில் அடிபட்டு கர்ப்பிணி சாவு
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கவுரி (வயது 26). இவருக்கும் ஏமம் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் திருமணம் ஆகி 5 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் 3 மாத கர்ப்பமான கவுரி தனது தாய் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கவுரி கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே கவுரி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com