மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பலி


மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பலி
x
தினத்தந்தி 8 Dec 2025 2:45 AM IST (Updated: 8 Dec 2025 2:45 AM IST)
t-max-icont-min-icon

இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி,

ஏரியூர் அருகே உள்ள பத்திரஹல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32), விவசாயி. இவரது மனைவி ரம்யா (27). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரம்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 1-ந்் தேதி ரம்யா தனது வீட்டு மேல் மாடிக்கு ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் இருந்து தவறி அவர் கீழே விழுந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story